பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

குன்றும் செய்குளமும் செழிக்கச் செய்தும் வளப் படுத்தியது. இத்தகைய பல சிறப்புக்களைப் பெற்றது சோழ நாடு.

இந்நாட்டிற்குத் திலகமெனத் திகழ்வது திரு வாரூர்த் திருப்பதியாகும். இது சோழர் குல மன்னர்கள் தலை நகரம் ஐந்தனுள் ஒன்று; பிறக்க முத்தி தரும் தலமுமாகும். இச்சிறப்புப் பற்றியே

திருவாரூர் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்

என்ருர் முனைப்பா டி நாதனுர் சுந்தரர். இது தொன்மை மிக்க தொல்பதியுள் ஒன்ருய் ஒளிர்வது. இதனே, மாமலராள் வழிபட்டனள். இது திரு வாருர்த் தேர் அழகு. என்னும் முதுமொழி பெற்றுத் திகழ்வது; திருமுறை ஓசை என்றும் இருத்தலின், கிள்ளே பாட அதனைப் பூவைகள் கேட்டின்புறும் இயல்பினது. மலர் மகட்கு வண்டாமரை போல மலர்ந்து அலகில் சீருடை அழகு.ை ப்பதி இஃது எனில், இதற்குமேல் என்ன அறைதல் வேண்டும் ?

இந்தகைய தாழிலுடைப் பதியில் பிறந்தவரே, பரவையார் என்னும் பாவையார். அவ்வம்மையார் குடியை உருத்திரக் கணிகையர் குடி என வழங்குவர். பரவையார், விளையும் பயிர் முளையிலே தெரியும், என்பதற்கேற்ப, அழகு செய்தவத்தால் அவனியில் வந்த அணங்கெனவே (தெய்வமகள்) வளர்வாரா யினர். அவ்வம்மையார்பால் பொற்பும் க ற் பு ம் நாளும் நாளும் வளர்ந்து பொங்கின. ஆதலின், அவரைக் காண்பார் அ&னவரும் கண்ணினேக் கண்டு, மாணிளம்பி3ணயோ !” என்று மருண்டனர்.