பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

சுந்தரர் பரவையாரைப் பார்த்துப் பரவசமுற்று மணக்க விரும்பியதற்கேற்பப் பரவையார் உள்ள மும் ஆரூரர் அன்பில் அழுந்தலாயிற்று. இருவரும் ஒத்த கருத்துடையராய் விளங்கினர். சுந்தரர்தம் கண்கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப, விண் கொள்ளாப் பேரொளியுடன் நின்ற தைப் பரவையார் எதிர் நோக்கினுt. அவ்வம்மை யார்க்கு வேட்கை எழுந்தது.

நாவலூர்ப் பெருந்தகையார் பக்கத்தே நின் ருரை அம்மங்கையார் யாவரென்று உசாவ, அவர் கள் உம்பரார்க்கும் சேர்வரிய உத்தமியாம் நங்கை பரவையா' என்று நவின்றனர். சுந்தரர், உம்பர்க் கும் சேர்வரியார்’ என்றதல்ை, 'உம்பர் பிரான் (சிவ பெருமான்) ஒருவனேயே உவந்து நாம் வேண்டுவம்’ என்று உளங்கொண்டார்; மெல்லியலாரை மணக்க வேண்டி இறைவரை வணங்கி நின்றர். பரவை யாரும் நம்பியை (சுந்தரரை)த் தந்தருளப் பரமரை நயந்து வேண்டினர்.

அன்பரி குறையை அகற்றி ஆளும் இறைவர் ந ம் பி க் கும் நங்கைக்கும் த கு நீ ைம யி ல் திருமணத்தை முடித்திட்டார். இருவரும் மணியும் ஒளியும் மான வும், மணமும் மலரும் நிகர்க்கவும், உடலும் உயிரும் ஒப்பவும் ஒற்றுமை உணர்ச்சியுடன் இல்லற இன்பத்தினே இனிது நுகர்ந்து ஆளுடைய பிரான் (சிவபெருமான்) சரணுரவிந்தங்களைச் சென்னியிலும் சிந்தையிலும் அலர்வித்து இன்புற்று வாழ்ந்து வந்தனர்.