பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

என்பதும், ' நான் உமக்கு அடியேன், என்பதால், "நீரே விரும்பி ஆட்கொண்டு அடிமை கொண்டதால் அடிமையின் வேண்டுகோளே ஆண் டான் முடித் தல் கடன், என்பதும், தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானுரேயாகில்’ என்பது, ‘என்னைத் தோழன் முறைமையில் ஏற்றுக்கொண்டதல்ை, உண்மை நட்புடையார்,

  • உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு '

என்பதற்கேற்ப, யான் உற்ற இடுக்கண் நீக்கல் இயல்பு, என்பதும், 'தாயின் நல்ல என்னும் அடை, 'தனயர் வேண்டுவது முடித்தல் தாயர் கடனுகும் என்பதும், அறிவு இழந்து அழிவேன், என்றதால், குற்றம் தெரிந்து செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்பதும் முதலான திரண்ட கருத்துக் களைக் கொண்டு இது திகழப் பெற்றுள்ளது. அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே ஆற்றி வைக்க எண்ணினர். முப்போதும் தம் திரு. மேனியைத் தீண்டுவார் (கோயில் குருக்கள்) வடி வோடு பரவையார் மாளிகைக்குச் சென்றனர்.

குருக்களைப் பரவையார் குறுகி வரவேற்ருர், வந்தவாறு உரைத்தருள வேண்டினர். மங்கை நீ மருது செய்யின் நான் வந்தவாறு உரை செய் வேன், என்று வந்த முனிவர் வகுத்துரைத்தார். இம்மறை சொற்கெல்லாம் பரவையார் மயங்கி மொழியும் திறத்தினரோ ? அதனை நீர் அருளிச் செய்யின், எனக்கு இசையும் ஆகில் இசையலாம்,'