பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

என்ருi. வந்தவர், ‘நம்பி ஈங்கு நின்னே நம்பி வர ஏற்பாய்,' என் ருர். பரவையார் சீற்றம் நிறைந்த மாற்றம் உடையராய், இங்கு எனப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி, அங்கே சங்கிலியால் தொடக்குண் டார்க்கு இங்கு ஒரு சார்பு உண்டோ ? நீர் இக் கடைத்தலே வருகை மற்று உம் பெருமைக்குத் தகுவது அன்று. நீர் போம்,' என்று செப்பிவிட்டார்.

பரவையார் இங்கனம் சிறிதும் சிந்தித்துப் பாராமல் மறுத்திட்டது நம்பியால் தமக்கு நன்மனம் இல்லை என்பதை அறிவித்தற்கன்று. அறிஞர் உரையை அப ட்டை ஆக்குவது என்பதும் அன்று. ஆண்கள் சமூகம், இன் மணம், பூண்ட ஏந்திழை ஒருத்தி இல்லத்தில் இருக்க, மற்றும் ஒரு மாதினை மணத்தல் அடாத செயல். அதனை அறவே கடிந்து ஒழித்தல் கடன் என்பதைத் தாம் உணர்ந்தே இங்ங் -னம் கூறினர் என் க.

துாதுவர் மீண்டு போதுவாராகிச் சுந்தரர்க்கு நடந்த வண்ணம் நவின்றனர். தம்பிரான் தோழர் (சுந்தரர்) தம்பிரான் (சிவபெருமான்) மாற்றம் கேட்டு உள்ளத் தடுமாற்றம் உற்றர். நீர் எம் இரு வரையும் இணைத்திலீர் எனில், என்னுயிர் உடலில் நில்லாது ஏகும், என்று இசைத்திட்டார். இறைவர் மீண்டும் பரவையார் இல்லம் நோக்கிச் சென்றனர். அம்மையார் அகம் இளகியது. அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீராகில் இசையாது என் செய்வல் ?’ என்று கூறித் தம் இசைவை வெளிப் படுத்தினர்.