பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

இதனை நம்பிக்கு நாதர்ை மொழிய, நாவலூரர் பரவையார் மாளிகையை நண்ணினர்;

‘ எழுதுங்கால் கோல்காளுக் கண்ணேபோல் '

கொண்கரைக் க ண் ட போது பழி காணுதவர் ஆயினர்; எனவே, கொண்கரை வரவேற்கச் சிறப் புப் பலவும் செய்தார். நெய்வளர் விளக்குத் தூபம் நிறைகுடம் நிரைத்து வைத்தார்; மாமணி வாயில் முன்பு வந்தெதிர் ஏற்க நின் ருர்; தண்டளிர்ச் செங்கை பற்றிக்கொண்டு மாளிகையுள் சார்ந்தார். ஒருவரை ஒருவர் உள்ளத்தால் பருகி ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்ருயினர்.

பிரிந்தவர் கூடினுல் பேசல் வேண்டுமோ ?”

இன்னணம் இருவரும் தம்முள் கலந்த அன் பினராய் வாழும் நாளில் கழறிற்று அறியும் பெரு மானுராம் அரசர் பெருமான் (சேரமான் பெருமாள் நாயனுர்) ஆர்வத்தோடு அந்தணர் பெருமான் அழைப்பிற்கிணங்கிப் பரவையார் இல்லம் வந்துற்ற னர். பரவையார் என்னும் பூவையாரும் எதிர் கொண்டழைத்து இருவர்க்கும் நீதி வழுவா. ஒழுக் கத்து நிறை பூசனைகளே முறையாகச் செய்தார்; கறியும் உணவும் சமைப்பித்து விருந்தும் அளித்திட் டார். பரவையார் மாளிகை பணத்தில் குறைவின் றிப் பல்கியதால் சிறப்புக்கொன்றும் குறைந்திலது.

சேரர் பிரானுக்கும் ஆரூர் பிரானுக்கும் உணவு பரிமாறப்பட்ட விதத்தைச் சேக்கிழார்,

  • பரிகலங்கள் ஏரின் விளங்கத் திருத்திக்கால்

இரண்டில்படியா ஏத்துதலும் '