பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł 14

நாட விரும்பாது, அம்மை இன்பத்துக்கும் அடி கோலும் ஆண்டவன் அருள் பெற்ற ஆண்டகை ஒருவரையே அன்புடன் மணக்க அவாவுகின்றேன். ஆதலின், யான் விழையும் ஒருவரையே எனக்குத் திருமணம் முடிப்பீராக. அதன்பொருட்டு யான் ஒற்றியூர் அப்பன் திருத்தளியடைந்து வரங்கிடம் பேன். அதற்கு வாய்ப்புத் தருவீராக,' என்று தாழ்ந்து பணிந்து புகன்றனர்.

புதல்வியார் இவ்வாறு புகல்வதைக் கேட்ட ஈன்றவர், அயர்வும் அச்சமும் அற்புதமும் எய்தினர். இன்பம் துய்க்கும் இளமையில் இறையருள் நாடும் தன்மை கண்டு வியப்பும், கன்னிப்பருவம் வாய்க்கப் பெற்ற காரிகையைத் தனித்து ஒற்றியூர்க் கோயிலில் விட்டு வைத்தல் யாங்ங்னம் இயலும் என்பதளுல் அச்சமும், தம் திருமகளார் விரும்பும் வண்ணம் அம்மனளன் வாய்ப்பனே என்னும் எண்ணத் தால் அயர்வும் கொண்டனர்.

இந்நிலையில் ஞாயிறுகிழார் ஞாதியருள் ஒருவன் தனக்குச் சங்கிலியாரை எவ்வாறேனும் மணம் முடிக்க முதியோர் சிலரை விடுத்தனன். வந்தவர் தம் கருத்துக்கூற ஞாயிறுகிழார் அவர்கட்கு.உண்ம்ை யாதும் உரையாது, குறிப்பால் இசைவு இன்மை யினைக் கூறி அனுப்பினர்.

ஏதம் எய்தா வகைமொழில்து ’

என்பதல்ை ஞாயிறுகிழார் சொல்வன்மை படைத்த துயர் என்பதும், இன்சொல் வழங்கும் இதயம்