பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 16

னர். இக்காலத்து நாம் காணும் மேனுட்டுக் கன்னி மாட முறை இருபதாம் நூற்ருண்டில் எழுந்த புது முறையன்று. இஃது ஒன்பதாம் நூற்ருண்டுக்கு முன்பிருந்தே வந்த தமிழ் நாட்டு முறையாகும் என்பதைச் சேக்கிழார் உணர்த்த உணர்ந்த நாம் எத்துணை இன்பங்கொள்ளவேண்டும் ! ஒருமின் !

சங்கிலியார் கன்னிமாடத்துத் தம் கடமைகளைச் செய்து வந்தனர்;

‘ என்க உள்பணி செய்து கிடப்பதே ’

என்னும் அப்பர் பெருமான் அருள்வாக்கிற்கிணங்க, அரனுர்தமக்கு அலர் மாலை தொடுக்கும் அருந் தொண்டில் ஈடுபட்டனர்; தியாகர் திருக்கோவிலைத் தினந்தோறும் புக்கிறைஞ்சினர். அ ம் ைம யார் கன்னியார் ஆதலின், ஆலயத்துள் எழினிவீழ்த்துத் (திரையைத் தொங்கவிட்டு) தம்மை மறைத்து இண்டை (மலை) கட்டி இன்புறுகையில், இறைவ. ர்ை அடிமை கொண்ட ஆரூரர் அரனுரை வணங்க ஆங்குற்ருர்.

அப்படி வந்தவர் திரை மறைவிலிருந்து மலர் தொடுக்கும் மண்டபத்தையும் பார்வையிட்டார்.

சங்கிலியார் அ ழ கி ன் கொழுந்து போல அமர்ந்து, அன்பு நாராக அஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்திருப்பதை அகங்குளிர, அம்பகம் (கண்) குளிர ஆரூரர் கண்ணுற்ருர், புறம் போந்தார்; மருங்கு நின்றரை, “என் உள்ளம் திரித்த இவ்வொள்ளிழையார் யாரோ?” என்று உசாவினர்.