பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H17

அம்மையார் அழகு ஆரூரர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதில் குற்றம் இல்லை.

அருகு நின்றவர் அன்பருக்கு அறிந்தவண்ணம் அறைவார் ஆயினர். ஐய, அவர்தாம் சங்கிலியார் என்னும் நன்னுமம் பெற்றவர்; பெருகு தவத்தால் ஈசர் பணிமேற்கொள்ளும் கன்னியார்,' என்றனர்.

நம்பியாரூரர், இந்நங்கையை இறைவரை வேண்டிப் பெறுவேன், என்று திடங்கொண்டார்; நேரே ஒற்றியப்பர் திருமுன் நின்றர்; கங்கையை யும் மலை மங்கையையும் மணந்த மாதேவரே, இங்கு உமக்குத் திருமாலே தொடுத்துத் திருத் தொண்டு புரியும் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும், என்று இரந்து நின்றர்.

நம்பி ஆரூரர், " மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின் கண், கங்கை தன்னக் கரந்தருளும் காத லுடையீர் !” என்று விளிக்கின் ருர். இவ்வாறு விளித் த த ன் நோக்கம் யாது? அது, “நீர் மலேயரையன் மடப் பாவையை மணந்ததோடு நில்லாது, கங்கையையும் மணந்து வாழும் விருப்பம் கொண்டு இருந்தீர். ஆதலின், யான் பரவை என்னும் பாவையை மணந் திருக்க ஈண்டுச் சங்கிலியாரையும் கடிமணம் புரிய வேண்டி நிற்றலின், என் அவாவினையும் முடித்து வைப்பீர், என்ற உட்பொருளே உணர்த்துவது அன்ருே?

இறைவரும் அன்பர் குறை முடிக்கத் துாண்டு சோதி விளக்கனையார்தம்பால் கனவில் தோன்றி,