பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 8

‘சாரும் தவத்துச் சங்கிலி, கேள்: நின்னைக்கண்ட ஆரூரன் சால என்பால் அன்புடையான்; மேரு வரையின் மேம்பட்ட தவத்தான்; வெண்ணெய் நல் லூரில் யாரும் அறிய யான் ஆள உரியான்; உன்னே அடைய என்னே இரந்தான். நீ அவனே மகிழ்ந்து மணத்தால் அணைவாய் ! என்று கூறினர். சங்கிலி யார் உள்ளக்கிடக்கை இன்னதென்பதை நன்கு உணர்ந்த இறைவர் ஆதலின், ஈசன் அருள் பெற்றவரை மணக்க இருக்கும் அம்மாதராருக்கு முன்னறிக்கையாகச் சால என்பால் அன்புடை யான்’ என்று சாற்றினர். தம்பால் அன்பே அன்றி அடிமையும் உடையவர் என்பதை அறிவிக்கவே, "யாரும் அறிய யான் ஆள உரியன், என்று உரைத் திட்டார். அவனே உன்பால் ஆசை கொண்டு மணக்க மனங்கொண்டான் ஆதலின், நீ அவனே மணத்தலில் மாசு இல்லை, என்பார், "நீ அவனே மணத்தால் அனேவாய் மகிழ்ந்து," என்றும் மலர் வாய் திறந்து அறிவித்தார்.

எம்பிரான் இசைத்த மாற்றம் ஏந்திழையார் செவி ஏற்று, "எந்தையிர், நீரே சொல்லின் யான் எதிருரை இயம்பலாமோ? எனினும், என்னே விரும்பும் எழிலுடையார் ஆரூரர் திரும்பிச் செல்லும் அவாவுடையார் ஆதலின், மணந்த பின் என்னைப் பிரிந்து செல்லின் என் செய்வது?’ என்று வின வினர்.

'அன்புடை அணங்கே, நீ அறைவது உண்மை

தான். இதுவே ஏதுவாகத் தடைசெய ஒண்ணுது. நம் சுந்தரன் நின்னேயும் நின் இடத்தையும் நீங்கா