பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 19

மைக்கு ஒரு சபதம் செய்யச் செய்வோம்,' என்று சாற்றி, தாய் முகங்காணச் சேய் நிற்பது போல இருந்த சுந்தரரிடம் போந்து, நடந்த வண்ணம் நவின்றனர்.

சங்கரர் தாள் பணிந்து இரந்து, மங்கையார் சபதம் செய்ய வந்த போது இறைவரைத் திருக் கோயிலில் இல்லாமல் திருமகிழின் கீழ் இருக்குமாறு வேண்டினுர் சுந்தரர். அன்பு வேண்டும் அரஞரும் அவ்வாறே செய்ய இசைந்தார்.

இறைவர் மகிழ்க்கீழ் இருக்க உடன்பட்ட தையும், சங்கிலியாரிடம் சென்று சாற்றிவிட்டனர்.

பொழுது புலர்ந்தது. புள் ஒலி செய்தது. வன் தொண்டர் வனிதையின் வரவு நோக்கி நின்றிருந் தார். சேய் இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் தூய பணி புரியத் திருக்கோயில் சென்று புக்கார். ஆருரர் அன்னுரை நெருங்கி, “இத்தலத்தைவிட்டு யான் பிரியாமைக்கு இசையும் படி இயம்ப்த் திங்கள் முடியார் திருமுன் போதுவீர்,” என்றழைத்தார். சங்கிலியார் நாணம்மிக்கு, ஒதுங்கிப் பூமண்டபத்துள் புகுந்தார். அம்மையார்க்கு அருகு இருந்த தாதியர், இதற்காக இமையவர்கள் பெரு மான் முன் சாற்றுவது அடாது. மகிழ்க்கீழ்க் கூறி லுைம் அமையும்,' என மொழிந்திட்டார். இசை ஞானியாரின் திருமகளுரும் மற்றதனுக்கு இசைந் திட்டார்; மறு மாற்றம் உரைத்திலர். யாவரும் சென்று மகிழை அடைந்தனர். சுந்தரர் முக்காலும் வலம் வந்தார்; “இத்தலத்தை விட்டு யான் அகலேன், என்றும் அறைந்திட்டார்.