பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

பிரிவதில்லை எனச் சத்தியம் செய்த பின்னர்க் கடிமணம் நிகழ்ந்தது. இன்பத் துறையினில் இறங்கினரேனும், இருவரும் தம்பிரான் திருவடி களில் உணர்வு சிறிதும் பிழையாராய் முப்போதும் போற்றிப் பூசனை புரிவார் ஆயினர். இங்ங்ணம் பல நாள் நடந்தன.

ஆரூரர்க்குத் திருவாரூர்த் தியாகேசரைக் காண அவா எழுந்தது.

ஏழிசையாய் இசைப்பயனுய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடளுவம் மாழை ஒண் கண் பரவையைத் தந்தாண்டானை மதியிலா ஏழையேன் எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர்

இறைவனையே."

என்று நினைந்து நினைந்து ஏங்கினர். இவ்வேக்கம் சத்தியத்தையும் மறக்கச் ெச ய் த து; ஆரூர் செல்லவே துணிவு தந்தது.

ஆகவே, ஆரூரர் ஒற்றியூர் எல்லையைக் கடக்க உளங்கொண்டார். எழுத்தறியும் பெருமானைப் போற்றிசைத்துப் புறப்பட்டார். சத்தியம் தவறிய காரணத்தால் அவர் பட்ட கட்டம் பலவாகும். பின்னர்ப் பரமரையே வேண்டி அக்கட்டங்களி னின்றும் விடுபட்டு இன்புற்ருர்.

சங்கிலியார், கண்ணிழந்தார் பெற்றிழந்தார் எனக் கலக்கமுற்ருர், முன்னே வினையின் முடிவு போலும்!” என்று புந்தியில் கொண்டு முன் போலத் திருத்தொண்டின் நெறியின் வழாது வாழ்ந்து வரலா னுர்.