பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்சி விளுக்கள்

1. அழகை வெறுத்த அம்மையார்

1. புனிதவதியார்க்கும், பரமதத்தனுக்கும் நடந்த திருமணம் பொருத்தமற்ற திருமணம் என்பதைச் சேக்கிழார் எங்ங்ணம் விளக்கியுள்ளார்?

2. அஃறிணை உயிர்களும் தத்தம் பெடையினிடத்தும், பிணையினிடத்தும், பிடியினிடத்தும் அன்பு கொண்டிருக் கின்றன என்பது எப்படித் தெரிகிறது ?

3. அம்மையார் ஏன் மதுரைக்குச் செல்ல நேர்ந்தது? 4. புனிதவதியார் ஏன் கயிலை நோக்கிப் புறப்பட் டார் ? பின்பு ஏன் திருவாலங்காட்டை அடைந்தார் ? அவர் இறைவனே நோக்கி வேண்டிய வரம் யாது?

2. உண்மைத்துறவுடைய உத்தமியார்

1. திலகவதியார் எதல்ை உண்மைத்துறவுடைய உத்தமியார் ' என்னும் சிறப்பிற்கு உரியவராளுர்?

2. திலகவதியார் தம் தம்பியார் திருநாவுக்கரசரிடம் பேரன்பு கொண்டவர் என்பது எதனுல் தெரிகிறது ?

3. கணவனுர்க்கேற்ற காரிகையார்

1. சேக்கிழார் அப்பூதியடிகளாரின் சிறப்பினை எவ் வாறு அறிவித்துள்ளார் ?

2. ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான் நட் பாம் கிழமை தரும்’ என்னும் குறட்கு அப்பூதியடிகளார் ஒர் எடுத்துக்காட்டாவார் என்பதை நன்கு விளக்குக.

3. அப்பூதி அடிகளார் மனேவியார் . கணவளுர்க் கேற்ற காரிகையார் என்னும் பெயருக்குப் பொருத்தமான வர் என்பது எதனுல் தெரிகிறது ?

4. சேக்கிழார் அடியார்களுக்கு நிகழும் தீங்குகளைத் தம் வாயாற்கூற அஞ்சுவர் என்பது எதனுல் தெரிகிறது?