பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

அறியார் அம்மையார். பல நாள் சென்றேனும் உண்மை வெளியாதல் இயல்புதானே? பரமதத்தன் செயல் பரவலாயிற்று. அவனது .ெ ச ய லே க் கேள்வியுற்ற அம்மையாரின் கிளைஞர் சிறிதும் காலந் தாழ்த்தாது நேரே அவனைக் காணக் கன்னி நாடு அடைந்தனர்; உண்மையை உணர்ந்தனர்; எனினும் அவனுடன் உரையாடாது, அவன் இருந்த இடத் தில் நற்றிருவனைய நங்கையாரை நண்ணுவிப் பதுவே கடன் என்று முடிவு செய்தனர்; மடநடை மயில் அன்னுரை மாமணிச் சிவிகை ஏற்றி, மதுரை மாநகரம் நோக்கிப் புறப்படலாயினர். அம்மையார் இளமை மாரு இன்னழகுடையர் என்பதைச் சேக்கிழார்,

" தாமரைத் தவிசில் வைகும் தனித்திரு ’’

என்னும் தொடரால் குறிப்பது, இன்பம் துய்க்கும் இந்நிலையில் பரமதத்தன் நீங்கிச் சென்றது துன்பம் உறவேண்டிய செயல் என்பதை அறிவிக் கவே ஆகும். சுற்றமும் நட்பும் சூழ யாவரும் மதுரையை அண்மினர்; தம் வருகையைப் பரமதத் தனுக்கு ஆள் போக்கி அறிவித்தனர்.

புனிதவதியாரின் வருகை கேட்ட பரமதத்தன், இடியோசை கேட்ட அரவம் போல இடர் உற்ருன்; ' இதற்கு என் செய்வது?’ என்று ஏங்கி ன்ை; ' மறுமணம் கொண்டது மாசாயிற்றே!" என்று மயங்கி னுன்; பிறகு ஒருவாறு தேறி, "நேரே சென்று புனிதவதியார் பொன்னடி பணிந்து. போற்றுதல் செய்வோம்,” என்று முடிவு கொண் டான். கோயில் வழிபாட்டிற்குப் போவான்போலக்