பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量4

குளித்து, தூய ஆடையும் அணிந்துகொண்டான் மனைவியும் மகவும் அவ்வாறே செய்துகொள்ளவும் கட்டளை பிறப்பித்தான். பின்பு மூவரும் புனிதவ யார் தங்கியிருந்த இடத்திற்கு நடந்து போந்தனர்.

சேய்மையில் தம் கணவனும், அவைேடு காரிகை ஒருத்தியும், காரிகையோடு அழகு மிக்க மகவும் வருவதைப் புனிதவதியார் கண்ணுற்றர். அம்மையார் பார்த்த பார்வை நேரிய பார்வையன்று; மருண்ட பார்வை; அச்சப் பார்வை; அவலப் (துன்பப்) பார்வை, “ இஃது என்னே! என்னை விடுத்து வேருெரு மங்கையை மணந்து, மகவும் பெறுதற்கு யான் அத்துணைத் தீங்கு யாது செய் தேன் ?’ என்று எண்ணி, உள்ளம் துடிக்கப் பார்த் தார். அப்பார்வையோடிருந்த அவ்வம்மையாரிை * மாணிளம் பிணைபோல் நின்ற மனே வியார் என்று பாவாணர் இசைக்கின் ருர்.

மான் மருண்டுதானே பார்க்கும் ! மாணிளம் பிணையாவது பெண்மான். இவ் வாறு மருட்சி கொண்ட நிலையில் மாதர்களுக்கு மானின் கண்களை உவமை கூறுவது மாபெரும்புலவர்க்கு வாய்த்த: தொரு மரபாகும். திருஞான சம்பந்தர் இளைய கோலத்துடன் முதுமை நிறைந்த பலரோடு பாண்டி யன் அவைக்களத்து வீற்றிருக்கையில், அம்முதிய வரால் பாலருவாயரான திருஞானசம்பந்தருக்கு ஏதேனும் இடுக் கண் நிகழுமோ என்றெண்ணி இருந்தார் மங்கையார்க்கரசியார் என்பதை அகத்து எண்ணத்தை முகத்தால் அறிந்த தோணிபுரத்