பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உண்மைத் துறவுடைய உத்தமியார்

துறவு என்றதும் ஒரு சிலருடைய உள்ளம் துணுக்குறுதல் கூடும். ஏன்? துறவு என்பது. மனைவி மக்களையும், வீடு வாயில்களையும் விட்டுக் காட்டிற்குச் சென்று கடுந்தவம் செய்வதன்ருே? பனி நாளினும், மழைநாளினும், கோடை வெயிலி லும் முத்தி அடைவதற்காகத் தம்மைத் தாமே சாலவும் துன்பத்திற்குள்ளாக்க நேருமே!’ என்னும் எண்ணந்தான் அத்துணுக்கத்திற்குக் காரணம், ஆனல், அவ்வாறு நெஞ்சம் அஞ்சவேண்டுவ தில்லை. நம் தமிழ் நூல்கள் தவத்தைக் கடுமையான் தென்று கழறவுமில்லை. வள்ளுவருடைய வாய் மொழியைப் பாருங்கள். அவர் தவத்தைப்பற்றி என்ன கூறுகிருர் ?

உற்றநோய் கோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு . என்று அன்ருே கூறுகிருச்? அவர் தவத்தின் இலக் கனத்தை இக்குறளில் தெளிவாக எடுத்துக் காட்டி ளுர். இதில் காவி உடை உடுத்த வே ண் டு மென்ருே, காட்டிற்குச் செல்ல வேண்டுமென்ருே கழறக்காணுேம். இதில் கூறியிருப்பவை எல்லாம், "எவன் ஒருவன் தனக்கு வந்த துன்பத்தை ஏற்றுப் பொறுத்து வருகிறனே, எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாதனுய் இருந்து வருகின்ருனுே, அவனே தவ மு. டையன், என்பனவே. இத்தகைய, உண்மைத்