பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தனிப்பெருமையுற்ருர், புனிதவதியர் : மனந்தும் மகப்பெரு நிலையில் வாடிய வாட்டம் கிர, இறை வரே தம்மை அம்மை என்றழைக்கும் தாய்மைப் பண்பையும் தாங்கலாயினர்.

இறைவர் அம்மையாரை "எதுவேண்டுமோ, அது வேண்டுக,” என்று விளம்பப் புனிதவதியாரும்,

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ருர் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே லுன்னே என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்ான் மகிழ்ந்து பாடி அறவாநி ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்ருர்."

இறைவரும் இவ்வரங்களை ஈந்ததோடு நில் லாது, “ திருவாலங்காடென்னும் திருப்பதியில் நீ சென்று எம் ஆனந்தக் கூத்தினக் கண் டு அகங் களிக்கப் பாடுவாய்,” என்றும் பணித்திட்டார். அம்மையார் அப்பணி, தலைமேற்கொண்டு, தலையன் பால் நடந்து, திருவாலங்காடடைந்தார்; ஆனந்த நடனம் கண்டார். அகத்தானந்தம் புறத்துப் பொழி வதுபோல, மூத்த திருப்பதிகம் மொழிந்திட்டார். இவ்: வம்மையாரது திருப்பாடல்கள் சைவத் திருமுறை பன்னிரண்டனுள் ப தி ேளு ர ம் திருமுறையில் விளங்கும் பெருமையுடையன,