பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to

பிறந்து மொழிபயின்ற பின் எல்லாம் காதற்

சிறந்துகின் சேவடியே சேர்க்தேன்-கிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வாளுேர் பெருமானே!

எஞ்ஞான்று தீர்ப்ப திடர் என்பது முதலாக நூறு பாடலப் பாடினர். இதன் .ொருள், விடம் பொருந்திய கழுத்தையுடைய தேவர்களின் தலைவனை சிவபெருமானே. நான் பிறந்து பேசத் தொடங்கிய நாள்முதல் உன் திருவடி களில் அன்புகொண்டேன். ஆகவே, என் துயரை ாப்போது தீர்க்கப்போகிருய்?’ என்பது. இந்நூல் அற்புதத் திருவந்தாதி என வழங்கப் பெறும். பின்னர் அம்மையார் இரட்டை மணிமாலை என்னும் இருபது பாடல் அடங்கிய நூலையும் பாடி, இறைவன் இருந்த கைலே நோக்கிக் கடுகிச் செல்வாராளுt. அவரது வருகையை இமயவல்லி (பார்வதி தேவி யாt) இனிதுற நோக்கி, இறைவனைப் பார்த்து, எற்பின் யாக்கை (எலும்பு வடிவமான இந்த உடல் பெற்ற உருவின்) அன்பு இருந்தவாறு என்னே ? என்று வினவ, பரமர், ' உமையே, இவள் நம்மைப் போற்றும் அம்மை. இப்பெருமை சேர் வடிவும் நம்மை வேண்டியே பெற்றதாகும்,” என்றருளிச் செய்யப் புனிதவதியாரும் அருகே சென்றனர். இறைவர், 'அம்மையே, வ ரு க !” என்ருt. இறைவர் தாயும் இல்லாதவர்; தந்தையும் இல் லாதவர் ; தாந்தோன்றித் தம்பிரான். ஆதலின், அவருக்கு 'அம்மையே” என அழைக்கும் வாய்ப்பு இதுகாறும் அமைந்திலது. புனிதவதியார் கைலை புக்கபோதுதான் இப்பேறு அவருக்குக் கிடைத்தது. ஆகவே, சண்டே இறைவர் தனையர் என்னும்