பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பூப்பயில்மென் குழல்மடவார் .

  • மனமலியும் மலர்க்கூக்தல் மாதர்ார் ’

பூங்குழலார் . என்று கூந்தல் சிறப்பைக் கூறிப் போந்தார். மற்றும் அம்மையாருக்கிருந்த செல்வ நிலையோ செப்பத்தர மன்று. அம்மையார் ஓங்கிய பேரில்லில் வாழ்ந் தனர். மேலும், தம்மை நாடி வந்தவர்க்கு நல்ல திருவமுதளித்தும் செம்பொன்னும் நவமணியும், செழுந்துகிலும் முதலான வேண்டுவ கொடுத்தும் வாழ்ந்தனர் என்பதையும் நன்கு அறிந்தோம். இவ் வாறு உருவும் திருவும் ஒருங்கே அமையப்பெற்ற அம்மையார் கணவனுக்கு உ க ந் த து ஆகாத வாழ்வை உடனே வெறுத்தார். தமக்கு அமைந்த வனப்புப் பிறர் மகிழ இன்றிக் கணவனுக்கென அமைந்ததென்று எண் ணி,

' இவனுக்காகத் தாங்கிய வனப்பு '

என்று கூறி அதனை எள்ளினர்; எங்கும் நிறைந்து இறைவரை நோக்கிளுர்; இறைவா, இத்தசைய பொதி (மாமிசப் பிண்டம்) கழித்துப் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற அளித்தல் வேண்டும். என்று வேண்டி நின் ருர்; எண்ணிய, எண்ணி யாங்கு எய்தினர்; வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் உற்றர். அம்மையார் நி: யைக் கண்ட உறவினரும், நண்பரும் பரமதத்தன் கூறியவை உண்மை என்று உணர்ந்தனர். அவ களும் தொழுது அகன்று போளுர்கள். அம்மையர் கருவிலே திருவுடையார் ஆதலின், அப்பொழுே இறைவர்மீது பாடவும் தொடங்கினர்.