பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செவியிலும் புகுந்தது. இது கேட்ட திலக வதியார்,

' உகிர்ச்சுற்றின்மீது உலக்கை விழுந்தது போல ’’ உளம் துடித்தார்.

அதுவரை திலகவதியார்க்கும் கலிப்பகையார்க் கும் திருமணம் நிகழ்ந்திலது. எனினும், உளங் கலந்த அன்பினர் ஆதலால், திலகவதியார் கலிப் பகையார் தம்மை மணந்த கணவரே எனக் கொண்டு, ஆவி நைந்தார்; இனித்தாம் உயிர் வாழ்ந்து பயனில்லை என்று உளங்கொண்டார். ‘எவரையும் சிந்தையாலும் தெரடேன்’ என்னும் கொள்கையராய், “எந்தையும் எம் அன்னேயும் அவர்க்கு என்னைக் கொடுக்க இசைந்துவிட்டனர். அந்த முறைப்படி நான் அவர்க்கே மனேயாள் என்னும் உரிமையள் ஆனேன். ஆகவே, என் உயிர் அனைய அவர் போய பின், உடல் அனைய யான் உலகில் இருந்து பயனில்லை,” என்று தாமும் உயிர் விட்டுப் புகழ் நிறுத்த முனைந்தார்.

இதனைக் கண்ட மருள் நீக்கியார் இடியே றுண்ட நாகம் போல உடல் பதைத்துத் 'தமக்கை யீர், நம் இருமுதுகுரவர் இறந்த நாள் தொட்டு உம்மையே அன்னராக எண்ணி இருக்கின்ற என்னைத் தனியே தவிக்க விட்டு நீர் செல்லுதல் தகுமோ? உமக்கு முன் யானே செல்கின்றேன்!” என்று தம் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்து நின் ருர். திலகவதியார், "இருதலைக் கொள்ளியுள் எறும்புபோல ஆயினர்; தம்பியார் உயிர் விடாது