பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

நேர்ந்தது. கலிப்பகையார் சமர் புரியச் சென்றவர் விரைவில் வந்திலர்.

புகழனர் தொண்டு கிழவர் ஆயினர். மூப்பும் பிணியும் அவரை முடுகி நின்றன. ஆகவே, அவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகு எய்தினர். மாதினியார் தம் கணவனுர் இறந்தமையால்,

' கொண்டானில் துன்னிய கேளிர் பிறர்இல்லை”

என்பதையும்,

' கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’’

என்பதையும் அறிந்து, தம்முயிர் கொண்டு தம் கணவனர் உயிரைத் தேடுவார் போலத் தாமும் இறந்தனர். திரியின்றிச் சுடர் நிற்குமோ?

திலகவதியாரும் மருள் நீக்கியாரும் பெற்ருேரை இழந்து பெரிதும் துன்புற்றனர். அவர்களது ஆருத் துயரினே அருங்கிளைஞர் சிறிது ஆற்றினர்; உலகின் நிலையாமையை எடுத்து உரைத்தனர்; இறப்பதும் பிறப்பதும், உறங்குதலும் விழித்தலும் போலும் என்று எடுத்து இயம்பினர். இவையனைத்தும் கேட்ட இருவரும் ஒருவாறு உளந்தேறி உற்ற துயர் நீங்கினர்.

இஃதிவ்வாருக, கடும்போர் புரியக் களம் புகுந்த கலிப்பகையார், விழுப்புண் பட்டு, வீர சுவர்க்கம் எய்தினர். இச்செய்தி திலகவதியாரின்