பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கொண்டார். அவரது திருவுளத்திற்கேற்பக் குலத் தாலும் நலத்தாலும் சிறந்த கலிப்பகையார் என்னும் கவினுடைய வீரருக்குக் கடிமணம் செய்விப்பதென முடிவு செய்தனர்.

கலிப்பகையார் அமரில் அரியேறு போன்று, தம் ஆற்றலை விகளப்பவர்; போர் என்ன வீங்கும் பொலங் கொள் தோளினர்; மறத்தில் (வீரத்தில்) சிறந்தார் ஆயினும், அறத்தினின்றும் சிறிதும் வழுவாதவர்; தாம் வழிபடும் புராரியினியத்தும் (முப்புரங்களை அழித்த சிவபெருமான்) தொழில் புரியும் புரவலரி டத்தும் (அரசரிடத்தும்) பற்று மிக வாய்க்கப் பெற்ற வர். இன்னுேரன்ன பண்பு வாய்க்கப் பெற்றவரைத் திலகவதியார் மணப்பது சாலவும் பொருத்த முடையதே.

திருமணம் நிச்சயமாகியது. இதற்கிடையில் ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது. கலிப்பகையார் எந்த அரசனிடம் படை வீரராய் இருந்தனரோ, அப் பார்த்திபனுக்கும் வடபுல வேந்தனுக்கும் பெரும் பகை மூண்டது. அவ்வடபுலவேந்தனைப் புற முதுகு காணப் பெரும்படை திரட்டிக் கலிப்பகை யாரே போக நேர்ந்தது. வேந்தற்கு உற்றுழி உதவலேயே இவர் உயர்பணியாகக் கருதினதால் அன்ருே, தமக்கு உறவினர் ஏற்படுத்திய மணத் தையும் மதியாது மாற்ருர் (பகைவர்) களம் புகுந் தனர்?

விரைவில் போர் முடித்து வீடு திரும்புவதாகச் சென்ற கலிப்பகையார், பலநாள் கடும்போர் செய்ய