பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

ஆசின்றி ஆற்ற நற்குணவதியாராய நங்கையார் ஒருவரை மணந்து, இல்லற நெறியை நல்லறமாக நடத்திவந்தனர். அவ்வம்மையார் மாதர்க்கெல்லாம் இனியராய் இருந்த காரணத்தால், மாதினியார் என்னும் திருப்பெயருடன் திகழ்வாராயினர். புகழும் இனிமையும் ஒன்று சேர்ந்தே, புகழனராகவும் மாதினியார் ஆகவும் தோன்றின போலும்!

மனேயறத்தை மாண்புற நடாத்திய அம் மாபெருந்தம்பதிகள் மனே மாட்சிக்குரிய நன்கல மாகும் நல்ல பிள்ளைப்பேறும் வாய்க்கப் பெற்றனர்.

பிள்ளைப்பேறு வாய்க்கப் பெருத பெண்ணை, மலடி என்று மாநிலம் பழிக்கும். ஒரு மகவை ஈன்ருலும், வாழை மலடி என்று வையகம் துாற்றும். அக்குறை நேராவண்ணம் மாதினியார் நன்மக்கள் இருவரை நலம்பெற ஈன்றனர். இரு வரும் இரு கண்மணி அனேயர். அவ்விரு குழவி களுள் முன்னது பெண் மகவு; பின்னது ஆண் மதலே. பெண் மகளார் கண் கொள்ளாக் கவினு டையவராய்ச் செங்கமலம் திகழவரும் திருவனைய வராய் விளங்கினர்; புகழனுர் குலத்திற்கே திலக மெனத் திகழ்ந்த காரணத்தால், திலகவதியார் என்றே திருப்பெயர் சூட்டப்பெற்ருர். ஆண் மக வுக்கு மருள் நீக்கியார் என்னும் மாண்புறு பெயரைச் சூட்டினர்.

திலகவதியார் குழவிப்பருவம் கடந்து குமரிப் பருவம் குறுகினர். குமரிப் பருவம் உற்ற திலகவதி யாருக்குத் திருமணம் முடிக்கப் புகழனர் திருவுளம்