பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இந்நாட்டின் இனியவளம் நாற்படையின் தோற் றத்தை நாட்டி நின்றது. வாழைக்குலைகள் நன்கு முற்றி நீண்டு தொங்கிக்கொண்டிருந்தன. செந் நெற்கதிர்கள் தம் கதிர்க்கொத்தினை அடர்த்தியாகக் கொண்டு தலை சாய்ந்து காற்ருல் அசைப்புண்டு விளங்கின. பெருமித நடையுடன் பெரும்பாரங்களே ஏற்றிச்செல்லும் வண்டிகள் தெருத்தோறும் சிறக்கப் போய்க்கொண்டிருந்தன. சோம்பல் இன்றிச் சுறு சுறுப்புடன் பல்பணி புரியும் வினைஞர், அணியணி யாய்ச் சென்றுகொண்டிருந்தனர். இந்நால்வகைத் தோற்றம் யாசீனப்படை, குதிரைப்படை, தேர்ப் படை, காலாட்படைகளின் நினைவினை எவர்க்கும் எழுப்பாமல் இராது.

குளங்களில் எருமைகள் படியும்; பின்னர் மலர் மேய்ந்து பசி தணிந்து மகிழ்வுடன் போவதும் உண்டு. அவை கருநிறத்துடன் பெரிய குளங்களில் படிவது, கடலில் கருமுகில்கள் நீர் பருகச் செல்வது போல இருந்தது. கருமே திகள் குளத்தில் மலரை மேய்கையில் வரால் மீன்கள் அவற்றின் மடியை முட்டும். அதனுல், அவற்றின்பால் பெருகும்.

இன்னுேரன்ன எழிலும் பொழிலும் பொய்கை யும் நிறைந்த திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்பது ஒரு சிற்றுார். இது சிறு பதியே ஆளுலும், சீரிய பதியே. இவ்வாறு பல்வளங்களும் பல்கப் பெற்ற இத்திருவாமூரில் தாளாளராகிய வேளாளர் குலத்தில் புகழனுர் என்னும் புண்ணியனர் வாழ்ந்து வந்தார். அவர் விருந்தளிக்கும் விருப்பினராய் ம8ணயறத்தை மேற்கொண்டார். அவ்வறத்தினை