பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கணவனுர்க்கேற்ற காரிகையார்

மக்கள் மேற்கொள்ள வேண்டிய அறம் இரண்டு. ஒன்று, இல்லறம்; மற்றென்று, துறவறம். முன்னேயது எளிது; பின்னேயது அரிது. நாயனர் துறவறத்தைப் பற்றிக் கூறும் போது,

" அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் கன்று ” என்று கூறுகின்றனர். ஈண்டு 'அஃது என்றது துறவறத்தை என்க. 'அஃது. பிறன் பழிப்பது இல்லையாயின் நன்று,” என்று கூறுதலினின்று. அதனை மேற்கொள்ளுதல் அருமையுடைத்தென்பது அறியக் கிடக்கிறது.

துறவற நெறியின மேற்கொள்ளாமல் இல்லற நெறியினின்றே அழியர் இன்பம் அடைந்தவர் உளரோ எனில், உளர் என்க. அவரே அப்பூதி அடிகளார் என்னும் அந்தணப் பெரியார் ஆவர். அவர் இல்லறத்தினின்றே திருநாவுக்கரசர் என்னும் திருப்பெயரை எழுதியும் சொல்லியுமே துன்பில் பதம் பெற்ருர். அவர் பெற்ற நிலயினே அழகுறச் சிவப்பிரகாச சுவாமிகள்,

சொற்ருன் எழுதியும் கூறிய மேயென்றும் துன்பில்பதம் பெற்ருன் ஒருகம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே ’’

என்று அறிவித்துள்ளார்.