பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

அப்பூதி அடிகளார் திருவையாற்றினின்று கும்பகோணம் செல்லும் நெறியில் உள்ள திங்களுச் என்னும் பதியினர். இவ்வூரினுக்கு விளக்கம் தந்த பெரியார் அப்பூதியாரே என்னலாம். அவர் தாண்டவம் புரிய வல்ல தம்பிரானுர்க்கு அன்பர். இல்லற நெறியார்; உயிர்க்கு உறுகண் செய்யாத தவத்தின் மிக்கவர். புகழ் அவரை நாடியதன்றி, அப்புகழை அவர் நாடினரில்லே. ஆகவே, அவரை,

"ஈண்டிய புகழினர்’

என்றே சேக்கிழ1t செப்பிளுரே அன்றி, ஈட்டிய புகழினர் என்று இயம்பினர் அல்லர். அவர் எல்லையில் தவத்தின் மிக்கார் என்பதற்கினங்கக் களவு, பொய், கோபம் முதலிய குற்றம் காய்ந்து விளங்கினர். தவத்தின் மிக்கவரே இக்குற்றங்களே ஒடுக்க வல்லுநர் என்பதை நன்கு உணர்ந்த வள்ளுவப் பெருந்தகையார், இக்குற்றங்களின் கொடுமைகளைத் துறவறத்தின் கண் பேசிக் கடிவா ராயினர்.

அப்பூதி அடிகளார் வளமிகும் மனையின் வாழ்க்கையினை மேற்கொண்டவராயினர் அப்பூதி யடிகளார்.

  • செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே”

(அஃதாவது, இறைவனது திருவடியைப் போற்றும் செல்வந்தான் செல்வம் என்பது) என்னும் சிரிய கொள்கையினராய் இருந்தமையின் தம் பெயரையும், பூதியார் என்று கொண்டனர் போலும்! பூதி என்னும் சொல் செல்வம் என்னும் பொருளுடையது.

3