பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இச்செல்வர் உலகறிந்த உத்தமராய் உலவிய மையால், உலகறி சுட்டாகிய அகரம் சேர்ந்து அப் பூதியார் என்று குறிப்பிடப்பட்டனர் எனக் கூறினும் தவறில்லை என்க.

அப்பூதியடிகளார் ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணுத திருநாவுக்கரசென்னும் சீரியர்பால் தம் சிந்தையைச் செலுத்தியவராய், அவரையே தம் குலக் கடவுளாகக் கொண்டு வந்தனை வழிபாடு ஆற்றி வருவாராயினர். அவ்வகப் பண்பு புறத்தும் பொலிவதாயிற்று. திருநாவுக்கரசர் திருப்பெயரால் திருமடங்கள் தண்ணிர்ப் பந்தர் முதலான பல்வேறு அறங்கள் உலகில் திகழ நடத்தி,வந்தனர்; இவையே யன்றித் தம் ம8னப்பால் உள் ள நிலையியற்பொருள் களும் இயங்கியற்பொருள்களுமான அளவைகள், நிறைகோல் (தராசு), மக்கள், ஆ, மேதி (எருமை) இவற்றிற்கும் தி ரு நா வுக் க ர ச ர் திருப்பெயரை இ8ணத்தே சுட்டி வந்தனர். என்னே அவர்க்கு அப்பர் பெருமானிடத்து அமைந்த அன்பின் மாட்சி: தம் மைந்தர் இருவரையும் மூத்த திருநாவுக்கரசு என்றும் இளைய திருநாவுக்கரசு என்றும் ஆர்வமுற வழங்கி வருவார் ஆயினர்.

இன்னணம் அன்பு காட்டிய அப்பூதியார், அப்பர் பெருமானராம் திருநாவுக்கரசரைக் கண்ட துண்டா எனின், அதுவும் இன்று; ஆனல் வாக்கின் வேந்தர் அடிமையையும், தம்பிரானர் அருளையும் கேள்விப்பட்டிருந்தார்; கேள்வி மூலமே அவர்பால் ஆரா அன்பு அமையப் பெற்றனர்.