பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

இப்பண்பாடு தமிழ் நாட்டுப் பெருமக்கட்கு அமைந்த தனித்ததொரு பண்பாடேயாகும். அப்பூதி யடிகளாரைப் போலவே வடிவு தாம் காணு நிலை யிலும் கலந்த அன்பினராய் இருந்தவர், கோப்பெ ருஞ் சோழர் என்னும் கோமகளுர். அவர் பிசிர் என்னும் ஊரினரான ஆதன் என்பவரின் தந்தை யாரிடத்தில் அளவு கடந்த அன்புடையவராய் இருந்தனர். ஆதன் தந்தையார் என்பவர் ஆந்தை யார் என்னும் புலவரேயாவர். ‘பிசிர் என்பது அவர் பெயருடன் இ8ணக்கப்பட்டுப் பிசிர் ஆந்தையார் என்று வழங்கப்படுவர். இப்பண்பு தமிழரிடையே தழைத்திருந்தமையான் அன்ருே மாதானுபங்கி என்னும் மாபெரும்புலவராம் திருவள்ளுவர்,

"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

கட்பாம் கிழமை தரும்’ என்று கூறிச் சென்ருர்? இதன் கருத்து, சேர்ந்து பழகி நட்புக் கொள்ள வேண்டுவதில்லை. உளம் கவர்ந்த உணர்ச்சியே நட்பு உரிமையைத் தந்து விடும், என்பது.

ஆகவே, அப்பூதியார் அப்பர் பெருமாளுரின் ஆக்கைப் பொலிவைக் கானவிடத்தும் அன்புப் பொலிவைச் கண்டு அவரிடம் அன்பு கொண்டு வாழ்ந்ததில் வியப்பில்லேயன்ருே ?

அவ்வப்பூதியார் கொள்கை வழுவா வண்ணம். உடனிருந்து உதவி வந்தவர் அவர்தம் மனத்திற்கு இனிய மனைவியார் ஆவர் என்பதை நாம் மறத்தல் கூடாது. இன்றேல், அப்பூதியார் திருநாவுக்கரசர்