பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பால் கொண்ட அன்பின் திறத்தை அலைத்திருப் பார். தம் கனவளுர்க்குப் பித்தம் தலைக் கொண் டது போலும் என, அதனைத் தீர்க்கப் பரிகாரம் தேடியும் இ ரு ப் பார். 'மாபெருந் தெய்வங்களே வணங்கிச் சிறப்பிப்பதன்றி மானிடர் ஒருவரையா மனத்துக்கொண்டு வணங்குவது?' என்று அதனைக் கண்டித்துமிருப்பர். அவ்வாறு செய்யாமையினின்றே அம்மையார் கணவனுர்க்கேற்ற காரிகையார் என் பதைக் காண்கின்ருேம் அல்லமோ ! இப்பண்பு அப் பூதியடிகளாரோடு வாழ்வு நடாத்திய அம்மையார் பால் ஆதி முதல் அந்தம்வரை அமைந்ததொன்ரும். இதனைத் தொடர்ந்து எழுதப் புகும் இவ்வரலாற்றில் காண்போமாக.

அப்பூதியடிகளார் இன்னணம் வாழும் நாளில் எந்தத் திருநாவுக்கரசரின் திருவடியினைகளை மற வாது போற்றிச் சிந்தித்துக்கொண்டு அடிகளார் வாழ்ந்திருந்தனரோ, அப்பெரியார் திருப்பழனத் திருத்தலத்தைப் பணிந்துகொண்டு, திங்களுர் வழி வருவார் ஆயினர். அன்னணம் போதரும் திரு நாவுக்கரசர் வளமருவு நிழலுறு தண்ணிர்ப்பந்தல் வந்தனேந்தார்; அப்பந்தரில் திருநாவுக்கரசெனும் பேர் எப்பக்கமும் அழகுற வரைந்துள்ளதைக் கண்டு, சிந்தனையில் ஆழ்ந்தார்; நம் பெயரால் இத்தொண்டு இங்கு நிகழக் காரணம் யாதோ ! என்பதை அறிய அவர் உள்ளம் விரும்பியது. அவர் அங்கு இருந்த வர்களை நோக்கி, “ இப்பந்தர்க்கு இப்பெயரிட்டு இங்கு அமைத்தார் யாரோ ? உணர்வீரேல் உரை மின்,” என, அவர்கள், "செப்பருஞ்சீர் அப்பூதி அடிகளார் செய்தமைத்தார்,” “என்று செப்பினர்கள்.