பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பெரியார் பகுப்பர். இப்பகுப்பு அவர் அவர் செல்வ நிலையால் அமைந்ததேயாம். இப்பரினும் கவிப்பர் செல்வர். கவிப்பரினும் பெருங்குடி மக்கள் பெருஞ் செல்வர்கள்.

இப்பெருங்குடியினர் மரபில் தனதத்தனர் என் னும் செல்வர் தோன்றிஞர். அவர் சோழநாட்டின் தொல் பதியாகிய காரைக்காற்பதியில் சிறப்பாய் வாழ்ந்து வந்தனர்.

காரைக்கால் வணிகர் பொதுவாகத் திரைகடல் ஒடியும் திரவியம் தேடும் திருவினர். மானமிகு தரு மத்தின் வழி நிற்பவர்; வாய்மையில் சற்றும் வழுவாத வர். அவர்கள் கடல் நெறியே செல்வதும் மீளு வதும் ஆய செயலை மேற்கொண்டவர்கள்.

தனதத்தளுருக்குத் திருமகள் தோற்றம்போல ஒரு பெண் மகவு பிறந்தது. பெற்ருேர் அம்மகவைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்துப் புனிதவதி என்னும் பெயரைச் சூட்டி வழங்கினர். அம்மகளார் பொங் கிய பேரழகு மிகு புனிதவதியார் எனத் திகழ்ந்தார். புனிதவதியார், நன்கு வளர்ந்து விளேயாடும் காலத் தும் இறைவனைப் பற்றிய பேச்சும் ஆட்டமுமே பயின்று வந்தனர். இவ்வாறு இவ்வம்மையார் தம் இளமைப் பருவத்தில் பயின்று வந்ததை நினைவிற் கொண்டே பின்னல் தாம் பாடிய அற்புதத் திருவந் தாதி என்னும் நூலின் முதற்பாடலிலேயே

  • பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதற்

சிறந்துகின் சேவடியே சேர்ந்தேன்’

என்று சிவபெருமானே நோக்கிப் பாடி மகிழ்ந்தார்.