பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

இவ்வாறு அறிவாலும் திருவாலும் உருவாலும் சிறந்த புனிதவதியார், கன்னிப் பருவத்தையும் கவி னுறப் பெற்றனர்.

புனிதவதியாரைப் பற்றிப் பாடவந்த சேக்கிழார் மொழியில் நாகரிகப் பண்பும் நயமார்ந்து காணப் படுகிறது. புனிதவதியார் பூப்பு (மணப்பருவம்) அடைந்தனர். பொதுவாகப் பூப்பிற்குப் பின் நடந்துகொள்ள வேண்டுவது இல்லிகவாமை. அஃதாவது, வீட்டை விட்டு வெளியே செல்லாமை. இதனை உட்கொண்டு சேக்கிழார், "இல்லிகவாப் பரு வம்’ என்று இயம்பியிருப்பது நம் நாட்டு மாதர் களின் பண்பை விளக்குவதோடு நாகரிக முறையை யும் நன்கு புலப்படுத்துகிறது.

தனதத்தர்ை திருமகளார் பூப்புற்றுப் பொலி வதைக் கேள்வியுற்ற நிதிபதி என்னும் பெயரிய வணிகர், இவரைத் தம் தனேயனுக்கு மண முடிக்க மனம் கொண்டார். அதனைப் பேசி முடிக்கப் பேரறிஞர் சிலருடன் நிதிபதி, நாகை நகர் நீங்கிக் காரைக்கால் வந்துற்றனர். வந்த முதியோர்களும் தனதத்தருைம் மணமக்களின் குணம் பேசிக் குலம் பேசிக் குறித்த நாளில் திருமணம் இயற்ற முடிவும் செய்தனர். மண விழா, குறிப்பிட்ட மங்கல நல் வேளையில் புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் தெளிதருநூல் விதி வழியே செய்து முடிக்கப்பட் டது. அம்மணவினையைக் கண்ட கேளிரும் கிஆள ஞரும் நனிமிக மகிழ்ந்தனர். இதனைச் சேக்கிழார் பெருமாளுர்,