பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

“ தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக் களிமகிழ்சுற் றம்போற்றக் கல்யாணம் செய்தார்கள்' என்று குறிப்பிடுகிறர். அம்மையார் மென்மைத் தன்மைக்கும் இளஞ்சாயலுக்கும் மயிலை உவமை கூறியது மிகமிகப் பொருத்தமுடையதே. அன் ணைமே தோற்றப் பொலிவுக்கும் ஏற்ற உணர்ச்சிக் கும் பரமதத்தனுக்குக் காளையை உவமை காட்டி ய்தும் சாலவும் தக்கதே. ஆனல், ஈண்டுச் சேக் கிழார் தாம் கூறிய உவமையில் இப்பொருத்தமே அன்றி ஏனையதொரு பொருட்பொருத்தமும் அமை யப் பாடியுள்ளார். அருண்மொழித் தேவராம் சேக் கிழார்க்கும் புனிதவதியாரின் வர லாற்றுப் பகுதி நன் கனம் தெரியும். இருவேறியல்புடைய அம்மணமக் கள் பின்னுளில் எங்கனம் இணைந்து வாழப்போகி ருர்கள் என்பதையும் அவர் நன்கு அறிந்தவர்; ஆதலின் இவ்வுவமையின் மூலம் பின்னர் நடக்க இருக்கும் நிகழ்ச்சியை முன்னர் நாம் அறிய அறி வுறுத்துகின்ருர். மயிலானது பறவை இனத்தைச் சார்ந்தது. காளை விலங்கின் ஈட்டத்தைச் சேர்ந் தது. புள்ளும் (பறவையும்) விலங்கும் பொருந்துதல் இயலுமோ! அவை பொருந்தி வாழ்தல் என்பது முயற்கொம்பே அன்ருே? அது போலவே, பரமதத் தனுக்கும் புனிதவதியார்க்கும் நடந்த கடிமணம் பொருத்தமற்றது. இவர்கள் பின்னல் பொருந்தி வாழும் நிலையினைப் பெருதவர் ஆவர் என்பதை உவமை முகத்தால் விளக்கி வைத்தார் உலகம் புக ழும் உத்தமராகிய சேக்கிழார் பெருமாளுர். பொருந்தி வாழும் இயல்பு அவர்பால் இருப்பதைப் புலவர் அறிந்திருந்தால் பாற்பொருத்தம் அமையக் கா8ளக்