பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

கும் இளமன நாகிற்கும் (பசுவிற்கும்) என்றேனும், பெடை மயிலுக்கும், சே வ ல் மஞ்ஞைக்குக் என்றேனும் செய்யுள் செய்திருப்பர் என்பதை நாம் அறிகிருேம்.

தனதத்தர் பெருந்தனிகர். அவர் குடிக்கு ஒரே அரும்புதல்வியார் புனிதவதியார். ஆதலின், தனி தத்தர் தம் அருமை மகளாரை அகன்றிருக்க மனங் கொண்டிலர்: என்ருலும், தம் அணிமாடத்தில் தம் பதிகள் வதிய எண்ணமுங்கொண்டில்ர். எனவே, தம் மருகன் பொங்கொலிநீர் நாகைக்குப் போகா வண்ணம், தம் பதியிலேயே அணிமாடம் தனித் தமைத்துப் புது மனே புகு விழாவும் நடத்தி, அதில் மணமக்களை அமர்த்தினர். இதுவே அறிவுடைச் செல்வர் ஆற்றும் செயலாகும். இவ்வாறே கோவ லன் கண்ணகியை மணந்த பின்பு தம்முடனின்றித் தனித்து வாழவே இருசார் இரு முதுகுரவர்களும்கோவலன் தந்தையாம் மாசாத்துவானும், கண்ணகி யின் தந்தையாம் மாநாய்கனும்-நேர்ந்து, அத் தம்பதிகளே மனேயறம் இயற்ற ஏற்பாடு செய்ததாகச் சிலப்பதிகாரம் செப்புகின்றது.

புனிதவதியார் பரமதத்தன் உடன் கூடி இல் லறத்தை இனிது நடத்தலாளுர். துறந்தார்க்கும். துல்வாதவர்க்கும், உணவின்றி வருந்துபவருக்கும், திக்கின்றி இறந்தார்க்கும் துணையாய் இருந்தனர். அவ்விருவரும் தென்புலத்தார் (பிதுர்க்கள்) தெய் வம், விருந்து, ஒக்கல் (உறவினர்) ஆதியோர்க்குத் தம் கடன்களை ஒழுங்காக நடத்தி வந்தனர்.