பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

மைந்தர் உயிர் பெற்றமைக்குப் பெற்ருேர் எவ் வளவு பெருமகிழ்ச்சி கொள்ள வேண்டும்! அவர் இன்பம் அடைந்திலt; துன்பம் கொண்டனர். ஏன்? *அறிவரும்பெருமை அன்பர் அமுது செய்தருளு தற்குச் சிறிது இடையூறு செய்தான் இச்சிறுவன், என்றுதான் சிந்தை நொந்தனர். பின்பு அப்பர் உணவு அருந்த அனைவரும் உணவு கொண்டனர். அப்பூதியார் இல்லத்தில் அப்பர் சின்னுள் தங்கினர். அப்பர் என்றும் அழியாப் புகழை அப்பூதியாருக்கு அளிக்க எண்ணினர். அதன்பொருட்டுத் தாம் பாடிய திருப்பழனப் பதிகத்தில்,

  • அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி' என்று ஈற்றுப் பாடலில் இயைத்துப் பாடினர். (இவ் வடியின் திரண்ட பொருள், "உலகில் வறுமை நீங்க யாகங்களைச் செய்யும் அப்பூதியார்’ என்பது.) அப்பூதியாரும் திருநாவுக்கரசர் திருவடிகளைப் போற்றுதலேயே பெருஞ்செல்வமாகக் கொண்டவர்.

துன்றிய நூல் மார்பராம் அப்பூதியடிகளார் என்றும் நிலவும் புகழ் பெற்றது எதனுல்? அன்னர் அப்பர் அடியினை அகத்துக்கொண்ட அருள் தொண்டினுல் எனில், அஃது ஒன்றுமட்டும் அன்று. அவரது அருள் தொண்டிற்கு அருந்துணையாய் நின்ற அவர் இல்லக்கிழத்தியாரது இணைந்த அன்புமே கார ண மாகும். அவ்வம்மையார் கணவனுர்க்கேற்ற காரிகையாராய்க் குலவியதே பெருங்காரணமாகும். இத்தகைய அம்மையாரைக் கணவனுர்க்கேற்ற காரிகையார் என்று கூறுதல் சாலவும் பொருத்தமன்ருே ?

4