பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பொன்னி நாடு (சோழ நாடு) எல்லாப்படி யாலும் பொலிவுடையதே. இது நீர் வளத்தால் ஒங்கி விளங்கியது. இந்நாட்டிற்கு அழகு செய்யும் நகரங்களில் திருக்கடவூர் என்னும் திருப்பதியும் ஒன்று. இறைவருடைய எட்டு வீரத்தானங்களுள் காலனைக் காய்ந்த பதியும் இதுவேயாகும். நீர் வளம் நிரம்பப்பெற்ற கடவூர் நிலவளத்தில் சாலச் சிறந் தது என்பதைச் சாற்ற வேண்டுவதில்லை. வயல் எல்லாம் விளைசெஞ்சாலியும், வரம்பெல்லாம் வளை யின் (சங்கின்) முத்தமும், அயல் எங்கும் கேள்விக் கூடமும் பெருகியிருந்தன. கமுகந்தோட்டம் ஆகாயம் அளாவிக் கணமுகிலத் தொட்டு நிற்கும். இன்னணமாய செழுமைக்கோ இருப்பிடமாய் இருந்தமையின், செய்தொழில்கள் சிறந்தோங்கி நின்றன. கடைசியரும் உழத்தியரும் பண்ணேயில் பாடல் பாடிக் களிப்பர். கன்றுள்ளிக் கனைத்த மேதி (எருமை) பால் சொரிய, வாவியும் குளனும் பால் மணம் கம்ழும். *

இத்தகைய சீரிய திருக்கடவூர், பல்கு குடி மக் கட்குப் பதியே ஆயினும், அந்தணர் அருங்குடிக்கும் அகமாய் இலங்கியது. ஆண்டு வாழ்ந்த அந்தண உத்தமர்கள் வள்ளுவர் கூறிய,

  • அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான் ’’

என்னும் சீரிய இலக்கணத்திற்கு இலக்கியமாய். இலங்கினர்கள். அவர்கள் வதிந்த இடந்தோறும், சாமவேதம் சந்தமாய்ப் பாடப்பட்டது. அவர்கள் கற்ருங்கெரி ஒம்பிக் கலியை வாராமே வேதத்தில்