பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மங்கலங்ாண் ஈந்த மாதரார்

கணவர் நல்வழி ஒழுகி அதனுல் பொருளை இழந்தாரானலும், அன்றி அல்வழி (தீயவழி) ஒழு கிச் செல்வத்தைச் சிதறச் செய்தாராளுலும், தம்மால் ஈயவல்லது எதுவாயினும் அதை ஈந்தே வந்தனர் தமிழ் நாட்டுக் கற்புடை மங்கையர்.

கோவலன் கண்ணகியை நோக்கி, ' வஞ்சங் கொண்ட தெஞ்சமுடைய மாதவி என்னும் மங்கை யைச் சார்ந்து, குலந்தரு பொருட்குன்றம் தொலைத் தேன். இச்செயல் எனக்கு நானுத் தருகின்றது,’ என்று நவின்ருன் . அந்நிலையிலும் தன் கணவன் கையில் காசின்மையால் கவல்கின்றன் போலும் என்று எண்ணியவளாய் நலங்கொள் முறுவல் நகைமுகமே காட்டினள் கண்ணகி. இன்னம் என் பால் பொன்னஞ்சிலம்பு உள்ளது. அதனையும் கொள்க,” என்று ஈந்தனள். இங்கு எடுத்துக் காட் டிய இவ்வரலாறு அல்லவை செய்த கணவனுக்குக் காற்சிலம்பை ஈந்ததாகும்.

இனி நல்லவை செய்து நல்குரவு (வறுமை) எய்திய நன்மணுளஞர்க்குத் தாலியை ஈந்த தகவு டைய அம்மையாரின் தன்மையைச் சற்று உணர் வோமாக. இவ்வம்மையார் செயல் முன்னர்க் கூறிய கண்ணகி செயலினும் சிறிது கண்ணிய முடையதே. சிலம்பு ஈதலில் பெருமையில்லை; தாலி யையே ஈதல் தனிப்பெருமையன்ருே ?