பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பாண்டி மாதேவியார் தம் வரம் பலித்ததென்று பரவசம் உற்றர். இவ்வம்மையாரால் அன்றே தென்னர் குலம் உற்ற பழி தீர்ந்தது? தமிழ் நாடு தான் உற்ற இடர் நீங்கியது? இத்தகைய அம்மை யாரைத் தென்னர் குலப் பழி தீர்த்த தெய்வமாதரார் என்று கூறுவது சாலப் பொருந்துமன்ருே? தெய்வச் சேக்கிழார் இம்மங்கையாரை மாதரசியாராகக் கருதினரல்லர் மாதெய்வமாகவே கருதினர்; இம் மங்கையார் திருவடிகளைப் போற்றுவாரைத் தாமும் போற்றுவதாகக் கூறுகிருர்,

மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம்

தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை

பொங்கொளிவெண் திருநீறு பரப்பி ைைரப்

போற்றுவார் கழலெம்மால் போற்ற லாமே '

o

என்னும் அடிகளைக் காண்க. சேக்கிழார் பெண்கள் இனத்திற்குப் பேறு தந்து பேசியதைச் சிந்திப்போ மாக !