பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

எங்கும் சிவனது திருப்பெயரே பரவுக ! உலகே துன்பம் நீங்கி இன்பத்தில் ஆழ்க !’ என்பது.

ஈண்டு நாம் பெரியதோர் உண்மை காணுதல் வேண்டும். அஃதாவது, மக்கள் தாம் பிறந்த சமய நெறியினின்றும் ம | று த ல் கூடாது என்பது. அவ்வாறு செய்தல் ஆண்டவன் எண்ணத்திற்கும் ஆகாதது என்பது சிறந்த சித்தர் யோகர் துணி பாகும்.

சமயம் மாறினுரை என்னணமேனும் மீட்டுப் பண்டைய நெறியினர் ஆகச் செய்தல் நெறியுடை யார் கடனுகும். வேற்றுச் சமயம் புகுந்தார் என்று விடவும் கூடாது. புகுந்தவர் மீண்டும் வர விருப்பம் கொள்ளின், அதனை வெறுத்தல் இன்றி. ஏற்றல் வேண்டும். ஏற்கலாம் என்பதை விளக்கு வனவே சமண் புகுந்த அப்பரும், கூன் பாண்டிய னும் மீண்டும் சிவநெறி புக்கனர் என்று கூறும் வர லாறுகள். ஆகவே, இக்காலத்தவர் மதமாற்றம் உற்று மீண்டு வர விரும்பின் அவர்கட்கு இடம் தந்து ஏற்க வேண்டுவது கடனுகும்.

நெடுமாறன் சிவநெறி மேற்கொண்டான். மறை யவர் வேள்விகள் (யாகங்கள்) மாருது நடந்தன.

இகத்தினில் இன்பம் எழுந்தது. யாவரும் அங் கயற்கண்ணிதன்ளுேடு (மீனுட்சி) ஆ ல வ - ய் (மதுரையில்) அமர்ந்த அமலரை அன்புடன் வணங் கினர்.