பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ஞான போனகர் (திருஞானசம்பந்தர்), அர சனே ஆயினும் ஆண்டியே ஆயினும் வேற்றுமை கருதாது, ஒரு படியாகவே எண்ணும் ஒருமைப் பாடுடையர் ஆதலின், அரசன் அழைப்புக்கு இணங்கி வருவர் என்பதறிந்த அமைச்சரும் அன் புடைச் செல்வியாரும் சென்று அழைக்க மடத் திற்கு ஊர்தியிற்சென்றனர்.

கெளனியர் குலாதிபர் (சம்பந்தர்) அங்கயற் கண்ணியின் மணுளரை (மீளுட்சி சுந்தரேசரை) அகத்துட்கொண்டு அரண்மனை வந்துற்ருர்.

பாண்டிய மன்னன் தன் வெப்பு நோயினைப் பொறுக்கலாற்ருது தீர்க்குமாறு வேண்டத் திருக்கழு மலத் திலகளுர் (சம்பந்தர்) நீறு பூசி நோயை நீக்கி ஞர். (பின்பு அனலும் புனலும் கரியாகத் திருநெறி யின் சீர்மையினே விளக்கிக் காட்டப்) பாண்டியன் சம்பந்தர் பாதங்களைப் போற்றிச் சமண் நீங்கிச் சைவளுளுன்.

  • வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமரன் நாமம்ே சூழ்க வையக முந்துயர் தீர்கவே'

என்னும் திருப்பதிகம் ஒதி, வேந்தனும் ஓங்குக என்னும் வாக்கால் பாண்டியன் கூனையும் நிமிரச் செய்து, நெடுமாறன் என்னும் வாழ்வையும் ஞான போனகர் ஈந்தார். இப்பாட்டின் திரண்ட பொருள், அந்தணர்களும், தேவர்களும், பசுக்களும் வாழ்க ! மழை பொழிக! அரசனும் உயர்க ! தீமை ஒழிக..!