பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

பொருட்டும் பையவே என்று பகர்ந்தார் என்றும், தீவைக்க உடன்பட்டது அரசன் குற்றம் ஆதலின், அவனும் அபராதம் உற்ருன் என்பதால் அத்தீப் பிணி அவனைச் சார அவன்பால் செலுத்தி அவன் பின்னல் உய்யவேண்டிப் பையவே என்று பண்பு டன் பகர்ந்தார் என்றும், அரசன் அழிவையுருது சிவநெறி அடையும் பேறும், தாமே தீண்டும் பேறும் பெறும் வாய்ப்புடையன் ஆதலின், அவன் உடல் ஊறு உருதிருக்கவே பையவே என்ருர் என்றும், இன்னுேரன்ன நயங்கள் பல பொருந்தப் * பையவே எனப் பாடினர் என்றும் சேக்கிழார் தெரிவிப்பது எத்துணே நயமுடையதாகக் காண் கிறது பாருங்கள் ! ,

வெப்பு நோய் செழியனைச் சேர்ந்தது. மருத்துவ நூல் வல்லவர் தம் பல்கலை அறிவால் நோய் தணி பும் வகை தேடினர். இஃது இயற்கையால் அன்றிச் செயற்கையால் எழுந்த நோயாதலின், எரியிடை இழுது (வெண்ணெய்) உகுத்தாற்போல வளர்தல் ஆயிற்று. மன்னன் நோயால் வருந்தின்ை. அருகு இருந்த அமைச்சரும் அருமனைக்கிழத்தியாரும், * பிள்ளையார் அருளால் இது பெயரும், என்றனர். * அற்றேல், அழைமின், என்று அரையன் அறைய, அது போது அரசனுக்கு ஆக்கந்தேடும் பேரறிஞர் இருவர் (மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும்) வறிஞன் பொற்கிழி வாய்க்கப் பெறின், எத்துணைக் கழிபேருவகை எய்துவானே, அத்துனே இன்பம் கொண்டனர்.