பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

ளுளராம் சம்பந்தர், இத்தீ எம்மைச் சாராமல் பையவே சென்று பாண்டியற்காக, எனப் பணித்தார்.

‘பையவே என்னும் சொல், ஞானசம்பந்தர் பதி கத்தில் பெய்யப்பட்ட சொல். அச்செ ல்லின் பொருளினைச் சேக்கிழார் ஆழ நினைந்தார்; நினேந்து நினேந்து அதன் பால் செறிந்த அரும்பொருளே உணர்ந்தார் ; அகங்களித்துக் கீழ் வரும் பாடலைப் பாடினும் :

பாண்டிமா தேவியார் தமது பொற்பிற்

பயிலும்கெடு மங்கலநாண் பாது காத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பி ஞலும் அரசன்பால் அபராதம் உறுத லானும் மீண்டுசிவ நெறியடையும் விதியி லுைம்

வெண்ணிறு வெப்பகலப் புகலி வேந்தர் தீண்டியிடப் பேறுடையன் ஆத லானும்

தீப்பிணியைப் பையவே செல்க என்ருர்.

பையவே என்னும் சொல்லின் பொருளை விளக்க எழுந்த பாடல் இது. அச்சொல்லின் விரி வுரை உரைக்கப் பாடப்பட்ட செய்யுள் இது. ஆளு டைய பிள்ளையாரின் அகத்தையுணர்ந்து ஆக்கப் பட்ட பாட்டு இது. தீப்பிணியைப் பற்ருது விரை யப் பற்றின், பாண்டியன் இறக்கவும் நேரும். இறந் தால் பாண்டிமாதேவியார் மங்கல நாண் இழந்து அமங்கல நங்கையராய் வாழ நேரும். ஆதலால், இது நேரா வண்ணம் இருக்கவே அன்புடைய அகத்தால் பையவே” என்ருர் என்றும், குலச் சிறையார் அரசன் பிழைக்க வேண்டுமென்று ஆசை கொண்ட அன்பர் என்பதை அறிந்து அதன்