பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

நாடு வந்துற்றர். அவரைக் காண மங்கையர்க் கரசியார் மன்னன்பால் விடை கொண்டு மதிமுடிச் சொக்கன் கோயில் சென்றுற்ருர். மந்திரியார் குலச் சிறையாரும் ஆண்டு வந்து புகலி காவலரின் (திருஞானசம்பந்தரின்) பொன்மலர் அடியினை முடி மிசைச் சூடினர்.

திருஞானசம்பந்தர் ஆலயத்தை யடைய ப் பாண்டிமாதேவியாரும் பாலருவாயரது (சம்பந்தரது) பாதமலர் சூடி வணங்கினர்;

' பானலங் கண்கள் நீர்மல்கப் பவளவாய் குழறி ’

யானும் என் பதியும் செய்த தவம்’ என்று நன் மொழி கூறி உபசரித்தார்; தாம் பெற்ற இன்பம் தம் கணவரும் பெறவேண்டும் என்னும் தயவால் தம் மொடு கணவரையும் இணைத்து, யானும் என் பதி யும் செய்த தவம்’ என்றே இசைத்தார். இன்பமும் துன்பமும் இருவர்க்கும் ஒன்றுதானே? சேக்கிழார் அரசினை மட்டும் குறிப்பிடும் மொழியால் கூருமல் அரசர்க்கும் நாட்டுக்கும் பொதுவாய் அமைந்த சொல்லாகிய பதியும் என்னும் .ெ சா ல் லா ல் சிலேடைப் பொருளில் யானும் என் அரசனும் " என்றும், யானும் என் நாடும் (மதுரையும்)" என்றும் பொருள்படும்படி கூறியதும் சேக்கிழார் திறனைச் செப்ப வல்லதாகும்.

ஞானசம்பந்தர் ஒரு திருமடத்தில் வந்துற்ருர், அவரை அவனின்று அகற்ற வேண்டிச் சமணர் திக்கொளுவினர். இதனை அறிந்த அருமறை அந்த