பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

“மண்ணெலாம் கிகழ மன்னனுய் மன்னும்

மணிமுடிச் சோழன்தன் மகளாம் பாண்டிமா தேவி! என்றும் பாடி இவ்வம்மையாரின் குலப்பெருமை குணப்பெருமை ஆகியவற்றைப் பலபடப் பாராட்டி யுள்ளார்.

இத்தகைய எழிலும் ஏற்றமும் நிறைந்த ஏந் திழையாராம் மங்கையர்க்கரசியாரோடு மாறன் வாழும் நாளில்,

"கிலத்தியல்பால் நீர்திரிங் தற்ருகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு” என்பது போல, வல்வினை வலியால் சிவ நெறி நீத்துச் சமண் நெறி மேற்கொண்டு ஒழுகினன்.

அரசன் எவ்வழி அவ்வழிக் குடிகள்’

ஆதலின், குடி மக்களும் அந்நெறியினைச் சார்ந்து இருந்தார்கள். இவர்கட்கிடையே சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல மந்திரியார் குலச்சிறையாரும், நங்கையார் மங்கையர்க்கரசியாரும் மட்டும், மறந் தும் புறந்தொழாதவராய்த் திருநெறியாம் சிவ நெறியே மேற்கொண்டொழுகினர்.

தம் கணவனுர் சமய மாற்றம் உற்றதனுல் மனம் வருந்தினர் மங்கையர்க்கரசியார்; பண்டு போல மீண்டும் என்று சிவநெறி பேணும் நிலையினர் ஆவாரோ !” என்று மதுரைச் சொக்கலிங்கப் பெரு மானே நாடோறும் போற்றுவ்ார் ஆளுர்; என் கணவர் மீ ண் டு ம் திருநெறியிற் புகுங்காலம் எக்காலம் ஆமோ !” என்று ஏங்கியிருந்தார். இந் நிலையில் திருஞானசம்பந்தர் செந்தமிழ்ப் பாண்டி