பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

கண்ணே, கூன்.பாண்டியன் என்பான் அரசு செய்து வந்தான். கூன் மாறன் உடற்குறையுடையனே; ஆளுலும், உள்ளக்குறை எள்ளளவும் இல்லாதவன்; தன் தோள் வலியால் பகைவரைப் புறங்கண்டவன். அவன் காலத்து வானவரையும் வளவரையும் வென்று, கன்னி நாட்டைக் (பாண்டி நாடு) காத்து வந்த்ான்.

நாடிழந்த பொறையனும் (சேரனும்) பொன் னித் துறையனும் (சோழனும்) மறத்தை மறந்து அறத்தைக் கைக்கொள்ள ஆவல் கொண்டனர். பனந்தார் மார்பன், கூடற்கோமான் குளிரடி பணிந்து வெறுக்கையையும் (செல்வத்தையும்) வேழத்தையும், காசையும் துாசையும் (ஆடையை யும்) கலந்து ஈந்து பணிந்து சேர நாட்டை அடைந் தான். வளவனும் தன்னுடைய வளநாட்டைப் பெறத் தான் ஈன்ற மங்கையர்க்கரசியார் என்னும் மாதர் திலகத்தை மாறனுக்கு மணம் முடித்து மகிழ்வு கொண்டான்.

நெடுமாறன் மங்கையர்க்கரசியாரை மனைவி யாராகப் பெற்றது, அவன் முற்பிறவியில் செய்த அருந்தவப் பேறே என்று அறையலாம். இவ் வம்மையாரைச் சிரபுரக்கோன் சிறப்பித்துப் பாடுங் கால்,

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக் கைமட மானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி'

என்றும்,

'சிவன் திரு நீற்றினை வளர்த்த

பந்தனை விரலி பாண்டிமா தேவி’