பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட

யானே அரசன் யானே கள்வன்

மன்பதை காக்கும் தென்புலம் காவல்

என்முதல் பிழைத்தது கெடுகவென் ஞயுள்’ என்று கூறித் தன் உயிரையும் போக்கிக்கொண் டான். நெடுஞ்செழியனது கோல் வல்வினையால் வஜளந்தது. அஃதாவது, கொடுங்கோல் ஆயது. அவ்வளைந்த கோலே மன்னன் விடுத்த உயிர் தான் செல்லும் விரைவில் நிமிர்த்திச் செங்கோல் ஆக் இயே சென்றது. இதனே இளங்கோ அடிகள் இயம்பித் தென்னர் குலத்துக்கு நேர்ந்த பழியைப் போக்கப் பாடினர்.

வல்வினை வளைத்த கோலை மன்னன்

செல்லுயிர் சென்று செங்கோல் ஆக்கியது'

என்பனவே அவ்வடிகளார் அமைத்த அடிகள்.

மற்றுமொரு சமயம் பாண்டியர் குடிக்குப் பழி வந்து சேர்ந்தது. அப்பழி அரசியல் துறையில் அன்றிச் சமயத் துறையில் நேர்ந்ததொன்ருகும். பாண்டியர் குடி சிவநெறி. பிறழாச் செழுங்குடி யாகவே சிறந்து விளங்கியது. இச்சிறப்பு, செழியன் நெடுமாறன் காலத்துச் சிறிது சீர்குறையல் ஆயிற்று. அச்சீர்க்குறையை அகற்றவே அம்மையார் ஒருவர் அரும்பாடு பட்டனர். அத்தெய்வ மாதரார் யாவர் என்பதை உணர்த்தவே இக்கட்டுரை எழுந்தது. இனி அதனைச் சிறிது ஆராய்வோமாக.

வையை என்னும் பொய்யாக் குலக்கொடி பொங்கிப் பாயும் மதுரை என்னும் மாங்களிக்