பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

என்னும் குறள் எழுந்திருக்குமா ?

கலயனுர்க்கு இழுக்கம் எய்தக்கூடாது என்று எண்ணிய அருண்மொழித்தேவர் வ ள் ளு வ ரீ கருத்தை உட்கொண்டு ஒழுக்கம் மிக்கார் என்று எடுத்துக் கூறுவார் ஆனர்.

கலை வல்ல கலயனுர் கடவூர்க் கடவுளுக்குக் குங்கிலியத் துாபம் சாலவே நிறைந்து விம்மும் பணி த8ல மேற்கொண்டிருந்தார். குங்கிலியம் என்பது இக்காலத்துச் சாம்பிராணி போன்று நன்மணம் கமழப் புகைக்கப்படும் பொருளாகும். இறை பணி செய்வார் இயற்றும் தொண்டுகளுள் இதுவும் ஒன்று. நாவுக்கரசரும்,

" சலம் பூவொடு தூபம் மறக்தறியேன். ' என்று கூறியதையும் காண்க. இறை வழிபாட்டிற்கு. இவை போன்றவை கருவிகளே அன்றி, இக்காலத் துக் கற்பூரம் கொளுத்திக் கவினுறு தளிகளைக் (கோவில்களை) கருமையாக்கும் வழக்கம் அக்கா லத்து ஆலயங்களில் இல்லே. -

கலயனர் இத்திருப்பணியை இ ைட ய ரு து: செய்து வருங்கால், வறுமை வந்து சிறுமை செய். தது. அவ்வறுமை அவர்பால் வர அஞ்சுமேனும், இறைவர் எண்ணம், அவரை வறுமை வந்து அணுக வேண்டும் என்பது. இதனை ஆசிரியர்,

  • அங்கவர் அருளி ளுலே வறுமைவங் தடைந்த பின்னும் ”

என்னும் சொற்களால் சொற்றனர். இவ்வறுமை இவரை வாழவைக்க வந்ததே அன்றித் தாழவைக்க