பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

வந்ததன்று. பொன்னே நெருப்பில் இட்டுச் சுடினும் அதன் ஒளி விஞ்சும். அது கருமை உருது. இது போன்ற தன்மையதே ஆன்ருேர்க்கு வரும் வறுமையும்.

" சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு ’’

என்று அன்றே தமிழ் மறையும் முழங்குகின்றது? ஆகவே, கலயனுர் வறுமையுற்றும் தாம் செய்பணி யைத் தவருது நடத்தி வந்தார். கலயனுர் தம் தொண்டு முட்டுப்படாதிருக்க நிலத்தை விற்ருர், தனத்தை இழந்தார். இதனுல் சுற்றமும் மக்களும் துன்புறலாஞர்கள். அந்த அரும்பொருள்களையும் இழந்து அவர் இப்பணிதலை மேற்கொண்டார் என்ப தால் அவரது தலையாய அன்பின் திறம் புலஞ. கின்றது.

இல்லத்தில் உணவுக்குரியது ஒன்றும் இல்லை. இரு பகல் உணவு இன்றி மைந்தரும் நைந்து வாடினர். இந்நிலை கலயனுர் மனைவியார் உள் ளத்தை உருக்கியது. அவர் மைந்தர் பசித்திருத் தலைப் பார்த்துச் சகித்திலர்; தம்பால் தாலியன்றி வேறு தரத்தக்க பொருள் இன்மையால் தம் கணவ ஞர் கையில் தாலியை ஈந்து, “ஐய, நெற்சில கொண் மின்,' என்றனர். இச்செய்கையால் அவ்வம்மையா ரைத் தாலியை ஈந்த தையலார் எனக் கூறலாம் அன்ருே ?

அம்மையார் அருங்குணம் தோன்றும் இடத் திற்குத் தோற்றுவாய் இதுவே. அவர் கணவனுர்

5