பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஆரூர் அம்மையார்

கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும். மான் வயிற் றில் ஒள்ளரிதாரம் பிறக்கும். கடலில் நன்முத்துப் பிறக்கும். சேற்றில் செந்தாமரை பிற க் கு ம். அங்கனமே பரத்தையர் குடியிலும் பண்புடைப் பாவையர் பிறத்தல் இயல்பு. மாதவி என்னும் மாபெருந்தேவியால் மாட்சிமையுற்றது அப்பரத் தையர் குடியன்ருே ? அங்ங்னமே மற்ருெரு பாவையாரும் அத்தகைய குடியில் பிறப்பாராயினர்.

குலத்தளவே யாகும் குணம் ”

என்பது, பொது மொழி. அப்பொது மொழி இன் ளுேரன்ன இன்குணவதிகளால் பயன்படுதலின்றிப் பாழ்படுதலும் உண்டு. இனி அப்பரத்தையர் குடி யின் பாலுையர் ஒருவரின் பண்பு நலன்களைப் பகர்வோமாக.

கங்கையிற்புனிதமாய காவிரி பாயும் கவினுடை நாடு சோழ வளநாடு அன்ருே ? அந்நாட்டு மன்னரே சோழர் ; பனி வரைக் குன்றினில் புலிக் கொடி பொறித்த பெருமையர். காவிரியின் சிறப்புக் கவிஞரின் உள்ளத்தைக் கொள்ளே கொண்டது. அதனைப் பூமகள்தன் செவிலி என்று செப்பினர்; அண்ணல் பாகத்தை ஆளும் நாயகியின் உள்ள நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது என்று உரைத்தனர். இவ்வளத்ததான ஆறு பாயும் நாட்

7