பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96.

கலிக்காமர் உயிர் பெற்றெழுந்து, நம்பியாரூரர் மாயா வண்ணம் வாளும் கையுமாய்ப் பிடித்துத் தடுத் திட்டார்.

அங்கிருந்தார் அனைவரும் இவ்வதிசயம் கண்டு இன்புற்றனர். ஏயர்கோனும் எழிலார் கோனும் (சுந்தரர்) அன்பு கொண்டு, ஒருவரை ஒருவர் வணங்கி உயிர் ஒன்ருனுற்போலப் புல்லி நின்றனர்.

" நீர்கிழிய வெய்த வடுப்போல மாறுமே

சீரொழுகு சான்ருேர் சினம் ”

என்பது போல, ஏயர்கோன் சீற்றமும் தணிந்தது.

கலிக் காமர் தேவியார் அவல நிலையினும் கவலை காட்டாது கண்ணுதல் அடியாரை அன்புடன் போற்றிய பயணன் ருே வன் பும் அன்பாக மாறியது? மருளும் தீர்ந்து அருளும் திகழ்ந்தது. ஏயர் சோ ர்ை ஏந்திழையார் பால் நற்பண்புகள் பலவும் இலகியதால் அன்ருே நல்லார் என்னும் நல்ல பெயர் மாதரார் இனத்திற்கே உரியதாயிற்று? அவ்வம்மையாரை அவலநிலையினும் கவலை காட்டாதவர் என்றும் மனையை மங்கலம் ஆக்கிய மாதரார் என்றும் பன் முறை கூறிப் பாராட்டுவோமாக !