பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

ஆருரர் அகத்துள் புக்கார்; ஆசனத்தமர்ந்தார். 'ஏயர் கோளுர் எங்கே? அவர்க்கு ஏய வன்சூலை தீர்க்க வந்துற்ருேம்,” என்று எழுந்தார். அம்மை யார் அவ்வினுவிற்குத் தாமே விடை இறுக்க இயலாதவராய் மனத்தொழில் மாக்கள் மூலம், "அவர் யாதோர் ஏதுவும் இன்றி, உள்ளே பள்ளி கொள்கின்ருர்,” என்று பகரச் செய்தார்.

“அம்மையார் கூறிய கூற்று அடாத கூற்று. அவர் சால்புக்கு இஃது ஒர் இழுக்கு,’ என்னலாம் அன்ருே? அற்றன்று.

' பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த

நன்மை பயக்கும் எனின் ’’

என்னும் சட்டமும் தமிழில் உண்டு. இதல்ை பொய் புகலக்கூடாது. ‘புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்,” என்னும் தொடருக்குரிய ஆ ழ் ந் த பொருளே அறிந்த பின் வேண்டுமேல் புகல்க.

  • வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல் '

என்னும் குறளினக். கருதும் போது அம்மையார்

அறிவித்தது அமைவுடையதே என்பதை நன்கு அறியலாம்.

வீட்டுப்பணியாள் அறிவித்தும் மேலும் ஆருரர் வினவ, ‘இனியும் மறைத்தல் குற்றமாகும், என் பதை உணர்ந்து உதிரம் சோர் வடிவைக்காட்டினர். உண்மை உணர்ந்த வன்ருெண்டர் தாமும் இறக்கத் துணிந்திட்டார். அது போது இறைவர் அருளால்