பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இந்நிலையில் நம்பியார் அனுப்பியவர் சிலர் ஓடி வந்து, நம்பியார் வந்தணேகின்ருர், என்று நவின்று நின்றனர். இத்கருணம் எவர்வரின் என்? எவர் போயினும் என்? இல்லம் தலைவரை இழந்து தத்தளிக்கும் நேரம்; காரிகையார் கண வரை இழந்து கலங்கும் காலம்; அவலச் சு ைவயே அகத்து நிகழும் அமயம். இத்தருணத்திலும் இவை யஜனத்தையும் புறத்தே காட்டிலர் கலிக்காமர் தேவி யார் ; வருபவர் தம்பிரான் தோழர் என்பதை அறிவர்; அவர் இறையருளும் கல்வியும் வாய்க்கப் பெற்றவர் என்பதையும் உணர்வர்; பரமனுர் விரும்பும் பத்தர் என்பதையும் அறிவர். “இன்னுேரன்ன பண்புடை யார் இல்லம் நோக்கி வருங்கால் இழவு கொண்டா டல் இனிதாமோ?’ என்று எண்ணியவராய் உடனே, “யாரும் அழுதல் செய்யாதீர், என்று ஆணையிட் டார். மங்கலம் என்ப மனே மாட்சி எ ன் ற து உண்மையன் ருே? கணவர் உடலே மறைத்து வைத் தார்; ஏவலர்தம்மை இல்ல்ம் பொற்புறச் செய்யு மாறு ஏவினர்; இதற்கிடையில் சுந்தரரும் வந்துறவே துாபதீபமும், பூரண கும்பமும் வைத்துத் தொழு தெதிர் கொள்ளச் சென் ருர். இவ்வாறெல்லாம் இனிதுற இயற்றிய இவ்வம்மையாரை மனேயை மங்கலம் ஆக்கியமாதரார் என்று வழங்காமல் வேறு எவ்வாறு வழங்குவது? என்னே அம்மையாரன்பு !

அன்பர்பணி செய்யவென்னை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானேவக் தெய்தும் ”

என்னும் உறுதியுடையவர் ஆதலின், இங்ங்னம் செய்தார்போலும்!